CHENNAI CITY OF MUSIC
  • Home
  • ABOUT
  • EVENTS
  • PRESS
  • ENLISTMENT
Picture
Picture
Picture
Picture
ABOUT

Picture
Photo: Rekha Vijayashankar, DakshinaChitra Museum
யுனெஸ்கோவின் படைப்பாற்றல் திறன் கொண்ட நகர கூட்டமைப்புக்கான பட்டியலில், இந்தியாவிலிருந்து, சென்னை, வாரணாசி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களை இடம் பெற்றுள்ளன.

தங்கள் மக்களின் படைப்புத்திறனைப் போற்றி, அதன் மூலம் நகர மேம்பாட்டையும்  பல சமூகங்களிடையே பரஸ்பர நல்லிணக்கத்தையும் முக்கியமாக ஊக்குவிக்கின்ற நாடுகள் மற்றும் நகரங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்த கலாச்சாரம் மற்றும் படைப்புத்திறன் ஆகியவை, அந்த இடங்களின் சுற்றுச் சூழல் மூலமே வளர்கின்றன. இவற்றை சார்ந்த கலைஞர்களை – அரசு கொண்டோ அல்லது தனியாருடன் சேர்த்தோ – ஊக்குவித்தல், மற்ற மக்களுக்கும் கலைஞர்களுக்குமிடையேயான உறவை பலப்படுத்தும் என்றும் இம்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

சமூகத்தில் உள்ள சவால்களை மக்கள் எதிர்கொள்ளவும், பொருளாதார, சுற்றுச் சூழல், மக்கள் தொகை ஆகியவற்றால் ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக்கொள்ளவும் இவை பெருமளவில் உதவுமென்று எண்ணப்படுகின்றது.
யுனெஸ்கோ, இம்மாதிரி முயற்சிகளின் மூலம், உலக மக்களிடையே கல்வி, அறிவியல், கலாச்சார ஒற்றுமையையும் நேசத்தன்மையையும் வளர்க்க விரும்புகிறது.

யுனெஸ்கோ படைப்பாற்றல் திறங்களாக  ஏழு படைப்பாற்றல் துறைகளை வகுத்துள்ளது
  • கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள், 
  • வடிவமைப்பு, 
  • உணவு இயல், 
  • திரைப்படம், 
  • இலக்கியம், 
  • ஊடகக்கலை
  • இசை

இவற்றின் துணை கொண்டு, இந்நகரங்கள், தங்கள் சமூக முன்னேற்ற கோட்பாடுகள், முயற்சிகள், திட்டங்கள் ஆகியவற்றிற்கு கலை மற்றும் கலாச்சாரத்தை முதன்மையாக வைத்து செயல்படுகின்றன.
In 2004, the United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) launched their famous Creative Cities Network (UCCN). The goal was to strengthen international cooperation between cities that have identified creativity as a strategic factor for sustainable urban development and inter-cultural dialogue. They believe that culture and creativity are lived and developed on the local level, and by tapping into cultural industries, both with the help of public authorities and the private sector, it can inspire civic engagement, and help people confront challenges that face their communities, including economic crises, environmental impacts, demographic growth, and social tensions. Ultimately, UNESCO, through programs like the UCCN, aims to build peace through international cooperation in education, the sciences, and culture.

The UCCN currently comprises 180 cities and focuses on seven creative fields. These include:
  • Crafts and Folk Art
  • Design
  • Film
  • Gastronomy 
  • Literature
  • Media Arts 
  • Music 
​
Using a combination of these fields, the creative cities are committed to placing culture and creativity at the core of their sustainable development policies, strategies, and initiatives.

யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகர கூட்டமைப்பில் - சென்னை
தமிழக தலைநகரமான சென்னையின் மார்கழி மாதத்தில் நடைபெறும் இசை மற்றும் நடன விழாக்களின் தொகுப்பானது, உலகப் ப்ரசித்தி பெற்றது.
தமிழகத்தின் தொன்மையான கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கும்மி, புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை, கரகாட்டம், பாம்பாட்டம், வில்லுப்பாட்டு முதலியன மக்களின் இயல்பு வாழ்வோடு ஒன்றி விட்டவையாகும். தற்போது அவற்றின் தொடர்ச்சியான கானா பாடல்களும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழர்கள் வாழ்வியலோடு பிணைந்த இசை, நடனம் முதலியன படைப்பாற்றல் திறன் கொண்ட நகரங்கள்  கூட்டணைப்பு முயற்சியால் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. நம்முடைய கலை பொக்கிஷைங்களை உலக மக்களுக்கு கொண்டு செல்லுவோம்!

CHENNAI AS A UNESCO CREATIVE CITY

Chennai, famous for its rich musical heritage, joined UNESCO’s Creative Cities Network in October 2017, for its contribution to Music. Chennai is the third Indian city on the list of UNESCO Creative Cities, which also includes Varanasi (City of Music) and Jaipur (City of Crafts and Folk).

Formerly known as Madras, Chennai is beacon of cultural synthesis, and is famous for the sensational “Madras Music Season,” also known as the “Chennai December Season,” festival season. Chennai is  also home to nearly a 1000 forms of folk art. Popular traditional folk art forms include: Kolattam, Oyil Attam, TheruKoothu (Literally translates to “Street Theatre”), Kummi, Puli Attam (“Tiger Dance”), Bommal Attam (South Indian Puppet show), Villu Paatu (“Bow Music”), Poi Kal Kuthurai Attam (“Dummy-Horse Dance”), Mayil Attam (“Peacock Dance”), Karagattam (a folk dance, where dancers are balancing clay pots on their heads), Kattai Koothu, Paambattam  (“Snake Dance”), and Oppari. In recent times, Gana music has also become a sensation.

As a flourishing cultural hub, Chennai has rightfully taken its place among UCCN’s list as a Creative City of Music and, in the spirit of the cultural city program’s goals, civic initiatives will ensure that we seek out more opportunities to share our cultural treasure with the citizens of the world.

சென்னை இசை நகரம் -  மக்கள் பங்களிப்பு
பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தி, அதன் வாயிலாக, பல்வேறு கலைஞர்களுக்கு, சர்வதேச வாய்ப்பை ஏற்படுத்த, மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் தலைமையில், இணை கமிஷனர், திருமதி லலிதா உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இரண்டு முக்கிய வழிகளில் பங்காற்ற உள்ளது.
1. நகர மக்களிடையே நமது கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்ச்சிகளை கொண்டு சென்று, அவர்கள் பங்களிப்பை அதிகப்படுத்துதல்.
2. நமது தமிழக இசை, நடனம், இலக்கியம் சார்ந்த கலைஞர்களை மற்ற நாடுகளில், நகரங்களில் உள்ள கலைஞர்களுடன் இணைந்து, தொன்மையான கலை வடிவங்களுடன், தற்கால சிந்தனைகளை இணைத்து தங்கள் படைப்பாற்றலை உலகுக்கு உணர்த்த வழிவகை செய்தல்.
CIVIC INITIATIVE 2019

The Greater Chennai Corporation has brought together a collective, with a core advisory group featuring representatives of  The Music Academy, Kalakshetra Foundation, Bharatiya Vidya Bhavan (Chennai), Sruti Magazine and Aanmajothi. In order to develop initiatives, the collective has two goals:
  1. To increase the general public’s participation in a variety of art-related events, which range from classical to contemporary forms.
  2. To enable artists of all disciplines, including music and dance, to collaborate with one another, as well as with other cities across the globe. 
This collaboration enabling will prepare artists for a range of activities, including enlistment of artists, seeking venues and events from around the world and coordinating with organisers and artists for such performances. 

To know more about our events, click here. ​
To know more about enlistment, click here
CONTACT
chennaiuccn@gmail.com    |    +91 63792 17918‬
Copyright © 2019
  • Home
  • ABOUT
  • EVENTS
  • PRESS
  • ENLISTMENT